#Breaking: ஒருவழியாக எதிர்க்கட்சிகளுக்கு ஒத்துழைத்த முதல்வர்.. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வந்தது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது ஆறாவது முறையாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பரவல் போன்ற விஷயங்களில் திறம்பட செயல்பட்டதாக கேரள மாநிலத்தை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருந்தது. இந்த நிலையில், தங்க கடத்தல் விவகாரம் தொடர்பான பிரச்சனை இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

அரசு பார்சலில் கடத்தி வரப்பட்ட தங்கம் தொடர்பான சர்ச்சையை அடுத்து, அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூறி அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் பல வன்முறை சம்பவமும் சிறிய அளவில் நடைபெற்றுள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வரும் 24 ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதம் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தை பொறுத்த வரையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,890 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். 44 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இப்போது திடீர் கொரோனா உச்சத்தால் திருவனந்தபுரத்தில் முழு ஊரடங்கும் அமலில் இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala CM Pinarayi Vijayan calls all political party meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->