ஆன்லைனில் மது விற்பனை.. முதலமைச்சர் பரிசீலனை.! குடிமகன்கள் மகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. 

இதனையடுத்து நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டினை விட்டு வெளியே வர வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால் பலர் தங்கள் சொந்த ஊருக்கு போகமுடியாமல் உள்ளனர். மேலும், மதுக்கடைகள் மூடப்பட்டது.

தற்போது 144 தடை உத்தரவு இருப்பதால் மது விற்பனையை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மது கிடைக்காத விரக்தியில் மது பிரியர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரையுடன் மது வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மது விற்பனை தடையால் சிலர் தற்கொலை செய்ததையடுத்து முதலமைச்சர் பினராய் விஜயன் உத்தரவிட்டிள்ளார்.

மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று மருத்துவர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைத்தால் மருத்துவம் பார்ப்பதற்கான உரிமம் ரத்தாகி விடும் என்று மருத்துவர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

அதேபோல, ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்தும், அரசு பரிசீலித்து வருவதாக
முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala cm pinarayi vijayan announecd alcoholic drink


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->