கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.2 ஆயிரம் மாத நிதிஉதவி, ரூ.3 இலட்சம் நிவாரணம் - கேரள முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,166 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணிநேரத்தில் 181 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகள் மற்றும் வீட்டுதனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,41,966 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன், " ஓணம் விடுமுறை நாட்களில் 11 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கல்வித் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 இலட்சம் நிதி உதவி வழங்கப்படும். இந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதத்திற்கு ரூ.2000 நிதிஉதவி வழங்கப்படும். அவர்களின் கல்விச் செலவை பட்டப்படிப்பு வரை மாநில அரசு ஏற்கும்.

இலட்சத்தீவில் என்ன நடக்கிறது என்பது குறித்து கேரளாவில் கடும் ஆட்சேபனை உள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் பொதுவான தீர்மானம் கொண்டு வந்து தேவையான நடவடிக்கை எடுப்பது சரியானதாக இருக்கும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala CM Pinarayi Vijayan Announce Financial assistance for children who have lost their parents to corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->