பிரதமர் மோடியின் அறிவிப்பு.. கேரள முதல்வர், பீகார் முதல்வர் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


இன்று மாலை 5 மணியளவில் இந்திய மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜூன் மாதம் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். தீபாவளி பண்டிகை வரை ரேஷனில் இலவசமாக அரிசி, பருப்பு, சீனி உட்பட பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று அறிவித்தார். 

இந்த அறிவிப்புக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், " கொரோனா தடுப்பூசி ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பது இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமான பதிலாகும். எங்கள் கோரிக்கைக்கு பிரதமர் சாதகமாக பதிலளித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

இதனைப்போன்று, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவிக்கையில், " 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகளை அறிவித்ததற்கும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை தீபாவளி வரை நீட்டித்தமைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். கொரோனாவுடன் போராடுவதற்கு இது உதவியாக இருக்கும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala and Bihar Chief Minister Welcomes Indian Prime Minister Announce Free Ration and Vaccine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->