பொள்ளாச்சி அருகே கேரளா மாணவர்கள் 150 பேர் அதிரடி கைது.! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி அருகே அனுமதியில்லாத ரிசார்ட்டில் போதைப் பொருட்களை உபயோகித்து, ரகளையில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோயம்பத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை உபயோகித்து இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்டதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

அந்தத் தகவலின் பேரில் கோயம்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையிலான குழு நடத்திய அதிரடி ஆய்வில் அனுமதி இல்லாத 'அக்ரிநெஸ்ட்' ரிசார்ட்டில் போதை வஸ்துக்களை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆனைமலை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தோட்டத்து உரிமையாளர் கணேஷ் உட்பட மேலும் 6 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala 150 students arrested


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal