தமிழகத்திற்கான நீரை வழங்குக - காவேரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவேரி ஆணையம் தெரிவித்துள்ளது. 

காவேரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் ஆணையமாகவும், உத்தரவுகள் பிறப்பிக்கும் ஆணையமாகவும் காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசு காவேரியில் நீர் வழங்க மறுக்கும் பட்சத்தில், காவேரி ஆணையத்திடம் தமிழக அரசு முறையிடும். இயலாத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவேண்டிய தேவையும் ஏற்படும்.

பருவமழை அளவு காரணமாக கடந்த சில மாதமாக கேட்காமலேயே கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீரினை காவேரியில் திறந்துவிட்ட கர்நாடகா, மழையளவு குறைந்ததும் வழக்கம்போல வேலையை காண்பிக்க தொடங்கியது. இதனையடுத்து, காவேரியில் நீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவேரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். 4 மாநிலமும் ஒருமித்த கருத்தை தெரிவித்தால் மட்டுமே மேகதாது குறித்து விவாதிக்கப்படும் என காவேரி நதிநீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் காவேரி நீர் மேலாண்மை வாரியத்தின் அடுத்த கூட்டம் நடைபெறும் என காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் ஹம்தர் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kavery Commission Order to Karnataka Govt Give Water to Tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->