சமஸ்கிருதத்தில் காசி.. தமிழ் மொழியில் தமிழ்நாடு - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


இன்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி பகுதியில் காசி-தமிழ் சங்கமம் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்தினார். 

அப்போது, இளையராஜா மற்றும் அவரது குழுவினர் "நான் கடவுள்" திரைப்படத்தில் இடம்பெற்ற "ஹர ஹர மகாதேவ்" பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலைக் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு மகிழ்ந்ததோடு, இளையராஜாவையும் பாராட்டினார். 

அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில், "வணக்கம் காசி" "வணக்கம் தமிழ்நாடு" என்று தனது உரையை ஆரம்பித்த பிரதமர் நரேந்திர மோடி, காசி தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன். 

காசியைப் போலவே தமிழ்நாடும் மகத்தான பழமையும், கலாசார பெருமையும் பெற்றது. பல வேற்றுமைகளைக் கொண்டுள்ள மிகவும் சிறப்பான நாடான இந்தியாவைக் கொண்டாடுவதற்கே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும், சமஸ்கிருத மொழியில் காசியும், தமிழ் மொழியில் தமிழ்நாடும் சிறந்து விளங்குகிறது. காசியில் துளசிதாசரும், தமிழகத்தில் திருவள்ளுவரும் பெருமை வாய்ந்தவர்கள். காசிக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் ஒன்று உள்ளது

இந்தியாவில் வேற்றுமையில், ஒற்றுமை காணுவதற்கு இந்த காசி-தமிழ் சங்கமமே சாட்சி. காசியும், தமிழ்நாடும் கோயில்களுக்கு பிரசித்தி பெற்றவை. இதையடுத்து, உலகிலேயே மிகவும் பழமையான மொழியான தமிழ் மொழியை நாம் வளர்க்க வேண்டும்.

காசி-தமிழ் சங்கமம் என்பது வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒன்று. தமிழ் கலசார திருமணங்களில் காசி யாத்திரை மிகவும் பெருமை பெற்றது" என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasi thamil sangamam prime minister modi speach


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->