12 மணிநேர இரயில் பயணத்தை, 4 மணிநேரமாக குறைக்க அதிரடி திட்டம்.. 56 ஆயிரம் கோடியில் திட்டம் தயார்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் எல்லையிலுள்ள காசர்கோடு நகரத்தில் இருந்து, திருவனந்தபுரம் வரை சுமார் 530 கிலோ மீட்டர் தொலைவு இரயில் பயணம் மேற்கொள்ள 12 மணி நேரம் ஆகிறது. அதிவேக இரயில்கள் கூட சராசரியாக 45 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இந்த பாதையில் பயணம் செய்கிறது. 

இதனால், சில்வர்லைன் என்று அழைக்கப்படும் ஹை செமி ஸ்பீடு இரயில் திட்டத்தை செயல்படுத்த, கடந்த 2009 ஆம் வருடம் கேரள அரசு முடிவெடுத்தது. தற்போது பணிகள் தொடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய அரசுடன் சேர்ந்து இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 4 மணி நேரத்திலேயே சென்றுவிடலாம். 

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த இரயில்கள் கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், கொச்சி விமான நிலையம், எர்ணாகுளம், கோட்டயம், செங்கானூர், கொல்லம் ஆகிய 9 ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். இந்த திட்டத்திற்காக ரூபாய் 56 ஆயிரத்து 443 கோடி பட்ஜெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் முதல் கட்டமாக ஆகாய வழியில் சர்வேயை முடித்துள்ளது. 

கடந்த 2020 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதத்தில் இரயில்வே அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பணிகள் தொடங்கப்படும் என்றும், மூன்று வருடங்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் திட்டம் நிறைவேற்றப்பட 9000 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. நிலத்தை கையகப்படுத்த மட்டும் 13 ஆயிரத்து 256 கோடி மற்றும் மறுசீரமைப்புக்கு ரூபாய் 4460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் நடைபெறும் போது 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கேரளாவில் சாலை விபத்துகள் பெருமளவு குறையும் என்றும் கூறப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kasaragod to Tiruvandrum K Train Scheme Ready to Start Work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->