பிரபலங்களின் கர்வா சௌத் பண்டிகையின் கோலாகல கொண்டாட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


வடமாநிலங்களில் கொண்டாடப்படும் கர்வா சௌத் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பாலிவுட் திரைப்படங்களில் கர்வா சௌத் சிறப்பிடம் பெற்றிருக்கும். பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீட்டில் திருமணமான நடிகைகள் ரவீணா டாண்டன், ஷில்பா ஷெட்டி, பத்மினி கோலாப்பூரி, நீலம் உள்ளிட்டோர் திரண்டு வந்து கர்வா சௌத் பண்டிகையைக் கொண்டாடினர். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் மனைவி அனுஷ்காவுடன் இணைந்து அந்த பண்டிகையை கொண்டாடினார்.

கணவரின் நீண்ட ஆயுளுக்காக மனைவி முழுநாள் விரதம் இருந்து வானில் முழு நிலவு தோன்றுவதை பார்த்து தனது கணவரின் கையால் விரதத்தை நிறைவு செய்வது இதன் சடங்காகும். நேற்று இரவு இந்தப் பண்டிகை டெல்லி, போபால்.

சண்டிகர், டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போபாலில் உள்ள பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங்கின் இல்லத்திலும் கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

மேலும், கிரிக்கெட் பிரபலங்களும் தனது சமூகவலைத்தளங்களில் அவர்களது வீட்டில் நடைபெற்ற கர்வா சௌத் பண்டிகையின் புகைப்படத்தை பகிர்த்துள்ளார்கள்.  இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது வலைதள பக்கத்தில் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karvachauth festival celebrations


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->