சுரேந்திரனிற்கு அடைக்கலம் கொடுத்தது யார்?.. அரங்கேறிய சண்டை.. காவல்துறை குவிப்பு.!! - Seithipunal
Seithipunal


முருகனின் கந்தசஷ்டி கவசம் பாடல் தொடர்பாக ஆபாசமாக சித்தரித்த யூ டியூப் சேனல் கருப்பர் கூட்டம் மீது, சென்னையில் உள்ள மத்திய சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர், சென்னை வேளச்சேரி பகுதியை சார்ந்த செந்தில் வாசன் (வயது 49) என்ற நபர் கைது செய்யப்பட்டார். 

மற்றொரு குற்றவாளியான போரூரை சார்ந்த சுரேந்திரன் (வயது 36), காவல்துறைக்கு பயந்து புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தப்பி சென்று தஞ்சமடைந்தான். காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்னதாக தனது சிகை அலங்காரத்தை மாற்றிக்கொண்டு, என்ன விஷயத்திற்கு கைது செய்ய போகிறார்கள் என்று தெரிந்தும் திடீரென நீட் தேர்விற்கு எதிராக குரல் கொடுத்து இருந்தனர்.

அரியாங்குப்பத்தில் சுரேந்திரன் கைது தொடர்பான தகவல் வெளியானதும் பாஜகவினர் கோட்டைமேடு தி.க அலுவலவகத்தை முற்றுகையிட்டனர். மேலும், சுரேந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். 

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பும் மாறி மாறி தாக்கிக்கொண்டது. இதில் பாஜக மாநில இளைஞரணி நிர்வாகி கார்த்திகேயனின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரிந்து இருதரப்பையும் கலைந்து செல்ல கூறி உத்தரவிட்டனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karuppar koottam fight in Pondicherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->