திருமணமானாலும் மகள்.. மகள் தான்.. நீதிமன்றம் அதிரடி.. பாலின பாகுபாட்டுக்கு விழுந்த செருப்படி.!  - Seithipunal
Seithipunal


ராணுவத்தில் வேலை செய்தவர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் உள்ளிட்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்கா பட்டேல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் நிரப்பப்பட இருக்கும் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். 

முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற கோட்டாவின் அடிப்படையில் அவர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதற்கான அடையாள அட்டையை ராணுவ வீரர்கள் நல வாரியத்தில் வாங்க சென்றிருந்தார். பிரியங்கா பட்டீலுக்கு திருமணமாகிவிட்ட காரணத்தால் தந்தையை சார்ந்தவர் அல்ல என்று கூறி அவரது அடையாள அட்டையை வழங்க ராணுவ வீரர்கள் நல வாரியம் மறுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரியங்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் பேரில் நடைபெற்ற விசாரணையில் எனது தந்தை கன்னிவெடிகளை அகற்றும் போது உயிரிழந்தார். அப்போது 15 வயதில் பள்ளி படிப்பில் சிரமப்பட்டு படித்துக் கொண்டிருந்தேன். தற்போது மாநில அரசு அறிவித்து இருக்கும் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளேன் எனக்கு அனைத்து தகுதிகளும் இருந்தாலும் திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் முன்னாள் ராணுவ வீரரின் மகள் எனும் அடையாள அட்டை வழங்க முடியாது என மறுத்துள்ளனர் என்று வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்  மகன் திருமணமானாலும் எப்படி தந்தைக்கு மகனாகவே இருக்கிறானோ அதேபோல ஒரு பெண் திருமணமானாலும் தந்தைக்கு மகள் தான். அவர்களது நிலையை மாற்ற இயலாது." என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து அவருக்கு ராணுவ வீரரின் மகள் எனும் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka women Case make Controversy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->