குடும்பத்தை நடத்த செலவுக்கு பணமில்லை.. சிறுநீரகத்தை விற்பனை செய்த அரசு ஊழியர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. இதனால் அம்மாநிலத்தில் 2 மாதத்திற்கும் மேலாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்த நிலையில், போக்குவரத்து துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. 

இதனால் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என போக்குவரத்து ஊழியருக்கு சம்பளம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், ஊழியர்களின் சம்பளத்தை பாக்கி வைத்து பணப்பட்டுவாடா செய்யப்பட இருந்த நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் பேருந்துகள் இயங்க தொடங்கியது.

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பஸ் போக்குவரத்து சேவைக்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக பஸ்கள் இயங்கவில்லை.


 
ஆனால், நிலுவை தொகை வழங்கப்படாமல் இருந்த நிலையில், குடும்ப செலவுக்காக கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர் தனது சிறுநீரை விற்பனை செய்துள்ள துயரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் பகுதியை சார்ந்தவர் அனுமந்தா கரகேரே, மனைவி மற்றும் 3 குழந்தையுடன் வசித்து வருகிறார். அனுமந்தாவுடன் அவரது தாயும் உடன் வசித்து வந்த நிலையில், அங்குள்ள கொப்பல் மாவட்டத்தின் குஷ்டகி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். 

அனுமந்தா கங்காவதி கர்நாடக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், மாத ஊதியமாக ரூ.16 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், கடந்த 2 மாதமாக ரூ.3 ஆயிரம் மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. 

இதனால், குடும்பத்தை நடத்த வழியில்லாமல் சிறுநீரகத்தை விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " அரசு ஊழியரான எனக்கு, கடந்த 2 மாதமாக முழுமையான ஊதியம் வழங்கப்படவில்லை. 

வயதான தாய், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வரும் எனக்கு அவர்களின் அன்றாட செலவு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டது. ரேஷனில் பொருள் கூட வாங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் குடும்பத்தை காப்பாற்ற சிறுநீரகத்தை விற்பனை செய்துவிட்டேன் " என்று தெரிவித்துள்ளார். இதனைக்கண்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக போக்குவரத்து கழக ஊழியரின் சிறுநீரக விற்பனை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka State KSRTC Bus Conductor Sales Organ due to Family Situation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->