தந்தையின் இறுதி சடங்கிற்கு சென்ற பெண்மணி.. பேருந்து ஓட்டுனர்களின் கெடுபிடி.. கதறி அழுத பெண்மணி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து துவங்கியது. பெங்களூரில் இருந்து 2 ஆயிரம் பேருந்துகள் இயங்கிய நிலையில், தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க பெண்ணொருவர் அங்குள்ள சிறுகுப்பா பகுதிக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் பேருந்தில் பயணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெண்மணி கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் இருந்து புறப்படும் பேருந்துகள் இடையில் நிற்காது என்று தெரிவிக்கவே, அங்குள்ள பல்லாரி சிறுகுப்பா பகுதியை சார்ந்த பெண்மணி பல்லாரி பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். பெண்ணை தடுத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவரை பேருந்தில் இருந்து இறங்க கூறி வற்புறுத்தியுள்ளார். இந்த சமயத்தில், பெண்மணி தனது தந்தை இறந்துவிட்டதாகவும், இறுதி சடங்கில் பங்கேற்க நான் செல்கிறேன் என்றும் கூறியுள்ளார். 

இதனை ஏற்றுக்கொள்ளாத நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பல்லாரிக்கு சென்று, அங்கிருந்து திரும்பி வருமாறு கூறவே, பெண் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பின்னர் பேருந்தை அனைத்து ஊரிலும் நிறுத்தி செல்ல அறிவுறுத்தவே, பெண் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து சிறுகுப்பாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். பேருந்து நிலைய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka state girl cry at bus stand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->