கைகோருங்கள்.. பொது இடத்தில் தும்புங்கள்.. கரோனாவை பரப்புங்கள்.. பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினீயர் போஸ்ட்.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸானது இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்திற்கு இந்தியாவில் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரேநாளில் 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொடர்பாக பல தகவல்களும் அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் பரவிக்கொண்டு வருகிறது. ஒருபுறம் நோயின் தாக்கத்தை புரிந்துகொண்டு மக்கள் செயல்பட நல்ல தகவல் பரவினாலும், போலியான தகவல்கள் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபர் முஜீப் முகமது. இவரது சமூக வலைதள பக்கத்தில், "கைகோர்த்து செல்வோம். இல்லத்தை விட்டு வெளியே சென்று முகத்தை மூடாமல் தும்முவோம், வைரஸை பரப்புவோம்" என்று பதிவு செய்துள்ளார். 

இந்த பதிவு இணையத்தில் பெரும் வைரலாக பரவி வந்த நிலையில், இந்த பதிவு காவல் துறையினர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முகம்மதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka software engineer call to spread corona virus in Facebook post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->