#வீடியோ: ஊரடங்கை மீறி செயல்பட்ட மளிகைக்கடை.. எச்சரித்த காவல்துறை அதிகாரி.. அட்டூழியத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்கும் பொருட்டு மே மாதம் மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலாகியுள்ளது. 

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் என பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், கரோனா நோயின் காரணமாக மக்கள் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டு, அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அனாவசியமாக சுற்றும் செயலை கட்டுக்குள் வைக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனைப்போல அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இயங்கும் நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதுஒருபுறம் இருக்க, பொதுமக்களுக்கும் - காவல்துறைக்கும் சில இடங்களில் மோதல் சம்பவம் ஏற்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியில் காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது அங்குள்ள மளிகை கடை அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக திறந்து இருந்துள்ளது. அந்த கடையை காவல்துறை அதிகாரி மூடச்சொல்லி கூறியிருக்கிறார். இதனால் அந்த கடையின் உரிமையாளர் மற்றும் பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், காவல் துறை அதிகாரியை தாக்கும் அளவுக்கு சென்றுள்ளது.இது குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka petti shop owner attack police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->