மகனுக்கு மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் பயணம்.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பாசமிகு தந்தை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நரசிபூர் கனிகன கோப்பலு கிராமத்தை சார்ந்தவர் ஆனந்த். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், ஊரடங்கால் இவரின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவரது 10 வயது மகனுக்கும் நரம்பு சம்பந்தமான நோய் இருந்து வந்த நிலையில், அதனால் கடுமையாக அவதிப்பட்டுள்ளார். 

இதற்காக மைசூரில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், பெங்களூரில் இருக்கும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சூழ்நிலையிலும், ஒருநாள் கூட விடாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், சிறுவனின் 18 வயது வரை இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக மருந்துகளை நிறுத்தும் பட்சத்தில் கை-கால் வலிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல இயலாமல் தவித்த நிலையில், மகனுக்கு மருந்து வாங்க பெங்களூர் செல்ல சைக்கிளில் சென்றுவிடலாம் என ஆனந்த் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, மைசூரில் இருந்து பெங்களூருக்கு சைக்கிளில் 2 நாட்களில் பயணம் செய்துள்ளார். மைசூரில் இருந்து சைக்கிளில் ஆனந்த் வந்துள்ளதை அறிந்த மருத்துவர்கள் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இதனையடுத்து, அவரது மகனுக்கு தேவையான மருந்து மற்றும் செலவுக்காக ரூ.1000 பணம் வழங்கி உதவி செய்த நிலையில், மருந்துகளை பெற்றுக்கொண்ட ஆனந்த் மீண்டும் சைக்கிளிலேயே வீட்டிற்கு சென்றுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mysore to Bangalore Father Travel Cycle to Get Medicine for Nerve system diseases Problem son


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->