குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்து, மகளின் உடலை ஏரியில் வீசிய சோகம்.. விசாரணையில் பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கப்பலாப்பூர் மாவட்டத்தின் கவுரிப்பித்தனர் புலிகுண்டே கிராமத்தில் உள்ள ஏரியில், கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதியன்று இளம்பெண்ணின் பிணம் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறைஅனர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்த விசாரணையில், அங்குள்ள தும்மக்குண்டே பகுதியை சார்ந்த சந்தியா (வயது 18) என்ற பெண்மணியின் உடல் என்பது தெரியவந்தது. இதன்பின்னர், சந்தியாவின் தாயிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, சந்தியாவின் தாயை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இதில், சந்தியாவை அவரது தாய், சந்தியாவின் சகோதரி, சந்தியாவின் தந்தை பாலகிருஷ்ணா, சந்தியாவின் சகோதரர் அசோக் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. சந்தியாவின் தாயான ராமஜினாமாவின் வாக்குமூல அடிப்படையில் சந்தியாவின் சகோதரி, சந்தியாவின் தந்தை பாலகிருஷ்ணா, சந்தியாவின் சகோதரர் அசோக் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும், சந்தியாவிற்கு 15 வயது இருக்கும் நேரத்தில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்துப்பூர் பகுதியை சார்ந்த வலிபுருடன் பழக்கம் ஏற்படவே, இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். வாலிபர் மாற்று சமூகத்தினர் என்பதால், இவர்களின் காதலிற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சந்தியா வீட்டை விட்டு வெளியேறி காதலரின் ஊருக்கு சென்ற நிலையில், மைனர் பெண்ணை கடத்தியதாக கூறி சந்தியாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, பெண்ணை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சந்தியாவிற்கு திருமணம் செய்ய வரன் பார்க்கவே, காதலனை திருமணம் செய்வேன் என சந்தியா அடம்பிடித்துள்ளார். இதனால் இந்த கொலை அரங்கேறியது தெரியவந்துள்ளது. இந்த கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka murder case police arrest family due to love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->