மருத்துவ தாயுடன் பாசப்போராட்டம் நடத்திய ஒருவயது மகன்.. எம்.பியின் நெகிழ்ச்சி பதிவு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரியாக இருந்து வருபவர் சுரேஷ் குமார். இவரது மகள் திஷா. இவர் மருத்துவராக இருந்து வரும் நிலையில், இவருக்கு திருமணம் முடிந்து, ஒரு வயதுடைய விக்ராந்த் என்ற மகன் இருக்கிறார். மருத்துவராக இருந்து வரும் திஷா, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால், தனது மகன் விக்ராந்தை தனது தாய் மற்றும் தந்தையின் பராமரிப்பில் விட்டு சென்றுள்ளார். 

மேலும், அவ்வப்போது தனது குழந்தையை வீட்டின் தூரத்தில் நின்றபடி பார்த்து சென்று இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மகனை பார்க்காமல் இருந்து வந்த நிலையில், தந்தையின் இல்லத்திற்கு திஷா வந்துள்ளார். பின்னர் தூரத்தில் இருந்தபடி தனது மகனையும் பார்த்துள்ளார். இந்த சமயத்தில், தாயை கண்ட பச்சிளம் குழந்தை, தாயின் அரவணைப்பிற்கு ஏங்கி கைகளை நீட்டி அழுதது. 

இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கிய நிலையில், இந்த விஷயம் குறித்து மந்திரி சுரேஷ் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உருக்கமாக பதிவிடப்பட்டு இருந்த அந்த பதிவு, பெரும் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து மந்திரி சுரேஷ்குமார் தனது டுவிட்டர் பதிவில், ‘என் மகள் டாக்டர் திஷா, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடந்த 3 நாட்களாக தனது ஒரு வயது மகன் விக்ராந்தை பார்க்கவில்லை. வீட்டில் பாட்டியிடம் (என் மனைவி சாவித்ரி) இருக்கும் விக்ராந்தை திஷா தூரத்தில் இருந்து பார்த்து சென்றார். அப்போது எங்கள் இதயம் கலங்கியது’ என்று உருக்கமாக குறிப்பிட்டு தனது மகள் திஷா, பேரன் விக்ராந்தை தூரத்தில் நின்று பார்த்து செல்லும் படத்தை பதிவிட்டு இருந்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Education Minister Suresh Kumar Daughter and Grand son Love


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->