நெருக்கடியான நேரத்தில் கர்நாடக அரசின் இன்ப அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகம் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது, காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் தான். இரண்டு மாநிலங்களும் மட்டுமல்லாது கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் வருவதால் நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து,  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.  மேலாண்மை ஆணையம் சார்பில் தமிழகத்திற்கு காவேரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவிற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. 

ஆனால் கர்நாடகா கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மற்றும் ஜூலை மாதம் திறந்துவிட வேண்டிய நீரினை இதுவரை திறக்காமல் எங்களுக்கே  நீர் இல்லை என்று கூறிக்கொண்டிருந்தது. இதனிடையே கபினி அணையில் இருந்து 500 கனஅடி நீர் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்து விட முடிவு செய்துள்ளது. 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதாவது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளதால், தற்போது தமிழகத்திற்கு நீரை திறந்துவிட கர்நாடகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இரண்டாயிரத்து 500 கனஅடி தண்ணீர் தற்போது தமிழகத்தின் காவிரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

நாளை இரவு நாளை மாலை தமிழகத்தின் எல்லையை திறந்து விடப்பட்ட நீர் வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்திற்கு காவிரி ஆற்றில் நீர் இருக்காது என்று வருந்திய வேளையில், தற்பொழுது கர்நாடகம் திறந்து இருப்பது தமிழகத்திற்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால் விவசாயம் செய்யவோ, குடிநீர் தேவைக்கோ நீர் வருமா என்பது சந்தேகம்தான். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka decidemore water release to tamilnadu in cauvery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->