கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் பரவியது நிபா?..! - Seithipunal
Seithipunal


மங்களூரை சேர்ந்தவருக்கு நிபா அறிகுறி இருந்ததால், அவரின் மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டு, அதனால் சிறுவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த துயரம் நடந்தது. இதனால் கேரள - கர்நாடக எல்லையில் இருக்கும் தட்க்ஷிண கன்னடா மாவட்டத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கேரளாவில் இருந்து மங்களூர் வந்த நபருக்கு நிபா வைரஸின் அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் குறித்த நபரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தட்க்ஷிண கன்னடா மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நிபா வைரஸ் அறிகுறி ஒருவருக்கு தென்பட்டதால், அவர் எங்கு சென்று வந்தார்? என்று விசாரிக்கையில் கேரளாவில் இருந்து மங்களூருக்கு வந்தது உறுதியானது. அவரின் சொந்த ஊர் கார்வார். கோவாவில் இருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் மருத்துவ உபகரண தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது இரத்த மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

நிபா அறிகுறி தென்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடுப்பி, உத்திர கன்னடா மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

இதனைப்போல, குடகு மாவட்டத்தை சார்ந்த 67 நபர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தில் கொரோனா இல்லை என்று வந்தது. அவர்களின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் சளி, இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அங்கு நடைபெற்ற ஆய்வில் 67 பேரில் 19 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் உறுதி சிரியப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் 19 பேரையும் மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Dakshina Kannada District Person May be Infect Nipah Virus Samples Sent Pune Institute


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->