கொரோனா வார்டில் பெண்கள் துப்பட்டா போட தடை.! காரணத்தை கேட்டு கண்ணீர்.!  - Seithipunal
Seithipunal


40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள், பெங்களூருவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அங்கே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண் நோயாளிகள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்த விஷயம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் இனி பெண் நோயாளிகள் துப்பட்டா அணியத் தடை விதிக்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளனர். 

மேலும், சில பெண்கள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்கின்றனர்  எனவே, பெண் நோயாளிகள் சேலை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெண் நோயாளிகளுக்கு டாக்டர்கள் ஆபரேஷன் தியேட்டரில் அணியும் உடையை கொடுத்துள்ளனர். மேலும், சில வயதான பெண்களுக்கு இதனை அணிய சிரமம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, பெண் நோயாளிகளைக் கண்காணிக்க அருகில் இருக்கும் சில நோயாளிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எனவே, ஏதாவது ஒரு பெண் நோயாளி பாத்ரூம் சென்றால், அருகில் இன்னொருவர் துணைக்கு போவது வழக்கம். இரவு நேரங்களில்தான் நோயாளிகள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு ஆளாகி, தூக்குப் போட நேர்கிறது. 

எனவே, அவர்களுக்கு தூக்க மாத்திரை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து தூக்க மாத்திரை, தொலைக்காட்சி, யோகா, தியானம் என மனதினை நிம்மதியாக வைத்துக் கொள்ளவும், உற்சாகமளிக்கவும் சில நிகழ்ச்சிகளை மருத்துவமனை ஏற்பாடு செய்து வருகின்றது. மனநல மருத்துவரை அவ்வப்போது அழைத்து வந்து நோயாளிகளுக்கு ஆலோசனைகளும் வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka corona ward woman dress change due to safety precautions


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->