இட ஒதுக்கீடு போராட்டம் நியாயமானது. உங்களின் பக்கம் நான் இருக்கிறேன் - கர்நாடக முதல்வர் எடியூரப்பா.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் குருபா சமுதாய மக்கள் தங்களை எஸ்.டி பட்டியலில் இணைக்க வேண்டும் என்றும், வீரசைவ லிங்காயத் சமுதாய மக்கள் தங்களை இதர பிற்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைப்போல பிற சமுதாயங்களை தங்களின் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

அனைத்து சமுதாயத்தின் போராட்டங்களுக்கு கர்நாடக ஆளுங்கட்சியாக பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை அதிகரித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவிடம் கேள்வி எழுபட்டது. 

அங்குள்ள தாவணகெரே பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, " அந்தந்த சமுதாய மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் சரியானது. நியாயமான கருத்துக்களை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அரசியலமைப்பு சட்டத்தின் படி போராட்டம் நடத்தவும், உரிமையை கேட்டு பெறவும் அதிகாரம் உள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக வாழ் சமுதாய மக்களின் கோரிக்கை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். அனைவருக்கும் ஆதரவாக நான் இருப்பேன். அனைத்து சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக மந்திரி சபையில் விவாதிக்கப்படும். நியாயம் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். நல்ல முடிவு எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka CM Yediyurappa Pressmeet about Caste Vice Reservation in State


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->