#வீடியோ: சத்தமே இல்லாமல் நடைபெற்ற திருமணம்..!! சர்ச்சையில் சிக்கிய குமாரசாமி.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. இவருக்கு நிகில் குமாரசாமி என்ற மகன் இருக்கிறார். இதனைப்போன்று கர்நாடக மாநிலத்தின் வீட்டு வசதி அமைச்சராக இருந்து வந்த எம்.கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதி. 

தம்பதிகள் நிகில் குமாரசாமி மற்றும் ரேவதிக்கு திருமணம் முடித்து வைக்க பேசி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸின் தாக்கத்தால் ஊரடங்கு அமலாகியது. 

இதனையடுத்து இவர்களின் திருமணம் குறித்த தேதியில் நடைபெறுமா? அல்லது மாற்றம் இருக்குமா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில், இவர்களின் திருமணம் குறித்த செய்தியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊரடங்கு கரோனா அச்சத்தின் காரணமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சொந்தங்கள், அரசியல் பிரமுகர்கள் குறைந்தளவு வரவேற்கப்பட்டு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த நிலையில், தம்பதிகள் மாஸ்க் போன்று எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாது திருமணம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் நடைபெற்று வரும் திருமண நிகழ்வுகளில் தம்பதிகள் மாஸ்க் அணிந்துகொண்டு திருமணம் செய்து வரும் நிலையில், இவர்கள் மாஸ்க் இல்லாமல் திருமணம் செய்தது மற்றும் சமூக இடைவெளி இல்லாதது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka cm kumarasamy son marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->