பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் திரையுலகினர்.! - Seithipunal
Seithipunal


கன்னட திரையுலகில் பிரபல நகைசுவை நடிகராக இருந்து வந்தவர் ராக்லைன் சுதாகர் (வயது 65). இவர் பழம்பெரும் நடிகரான வாஸ்துபிரகா, ஐயோராமா, டோபிவாளா, முகுந்தா முராரி, பஞ்சராக்கி, லால் இன் மாண்டியா போன்ற 200 க்கும் மேற்பட்ட படங்களில் நகைசுவை மற்றும் குணசித்திர கதாபாரத்தில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்னதாக ராக்லைன் சுதாகருக்கு கொரோனா உறுதியான நிலையில், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து குணமடைந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வீட்டிற்கு திரும்பினார். 

இதனையடுத்து கன்னட இயக்குனரான சசிதர் இயக்கி வரும் சுகார்லெஸ் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் சுதாகர் கலந்துகொண்டுள்ளார். இந்த படப்பிடிப்பு பன்னர்கட்டா பகுதியில் நடந்த நிலையில், சுதாகர் திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். 

இவரை மீட்ட சக படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதி செய்த நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில், சுதாகரின் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Cine Actor Rockline Sudhakar passed away due to Heart Attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->