சோறு, தண்ணீர் கொடுக்காமல் புகைப்பட கலைஞரை அவமதித்த மணமக்கள் வீட்டார்.. ஆவேசத்தில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பசி, உடல் அசதி, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட புகைப்பட கலைஞர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தான் எடுத்த புகைப்படத்தை மணமக்கள் வீட்டார் முன்பு நீக்கி அதிரடி காண்பித்தார்.

திருமணங்களின் இன்பமான பொழுதுகளை புகைப்படமாக பதியவைத்து, வாழ்நாட்கள் முழுவதும் பார்க்கும் வகையில் இருக்க புகைப்பட பதிவாளர்கள் பேருதவி செய்கின்றனர். அன்றைய காலங்களில் புகைப்பட கருவிகள் அறிமுகம் இல்லாத நேரத்தில், அந்த தருணத்தை ஓவியமாக சித்தரித்தும், மனதில் பதியவைத்து வாழ்ந்தார்கள். இன்று, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வீடியோ காலில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து சொல்லும் நிலையும் ஏற்பட்டு விட்டது. அன்று இருந்த பாசமும், பந்தமும், அர்ப்பணிப்பும், மகிழ்ச்சியும் தான் மறைந்து வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர் கிடைக்காத நிலையில், தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக புகைப்பட கலைஞரை அவசரத்திற்கு ஏற்பாடு செய்து, ஒருநாள் சம்பளமாக ரூ.250 பேசி முடிக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞருக்கு தொகை விருப்பம் இல்லை என்றாலும், மணமக்கள் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக சென்றுள்ளார். 

திருமண நிகழ்ச்சி தொடங்கி மணமக்கள் உறவினர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், இரவு 7 மணி வரை தொடர்ந்து கொண்டே சென்றுள்ளது. காலையில் வந்த புகைப்பட கலைஞருக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் தனக்கு பசிக்கிறது என்று கூறியும், இன்னும் 20 பேர் தான் என புகைப்படம் எடுக்க வைத்துள்ளனர். எனக்கு பசிக்கிறது, ஒரு 10 நிமிட ஓய்வு வேண்டும், ஒரு 10 நிமிடம் இடைவெளி தாருங்கள், தண்ணீராவது கொண்டு வந்து கொடுங்கள் என்று கதறியும் பலனில்லை. 

ஒருகட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த புகைப்பட கலைஞர், எனக்கு ஓய்வு மற்றும் உணவு கொடுக்க முடியுமா? முடியாதா? என குரலை உயர்த்த, மணமக்கள் குடும்பத்தினர், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வரும் தோ கி.மீ பையா என்ற வசனத்தை போல, அதே 20 பேர் வசனம் தொடர்ந்துள்ளது. இதுதான் உங்கள் முடிவா? என புகைப்பட கலைஞர் இறுதியாக கேட்க, குடும்பத்தினரும் ஆமாம் என்று கூறியுள்ளனர். 

பசி, உடல் அசதி என மன அழுத்தத்திற்கு உள்ளாகிய புகைப்பட கலைஞர், மணமக்கள் முன்னிலையிலேயே தன்னால் எடுத்த அனைத்து புகைப்படத்தையும் நீக்கிவிட்டு, உங்களின் பணம், சாப்பாடு எனக்கு வேண்டாம். நான் உங்களது புகைப்பட கலைஞர் இல்லை., வேறொரு நபரை வைத்து புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். புகைப்படத்தை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்?. நினைவுகளை உங்களின் மனதில் வையுங்கள் என ஆவேசமாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bangalore Photographer Delete Captured Image at Marriage Reception due to Hungry Long Time


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->