கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லை விவகாரம் : இன்று விசாரணையை தள்ளி வைத்ததற்கான காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகம் - மகாராஷ்டிராவிற்கு  இடையே பெலகாவி எல்லை பிரச்சினை ஒரு தொடர்கதையாக வந்துள்ளது. பெலகாவி எல்லை பிரச்சினை எழும் போதெல்லாம் அது கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று கர்நாடகம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2004 ஆம் ஆண்திலிருந்து நிலுவையில் உள்ள நிலையில், எல்லை பிரச்சினை தொடர்பாக தற்போது இரு மாநில எல்லையில் பதற்றமான, பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 30-ந் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் படி, இன்று விசாரணை நடக்க உள்ளதால், எந்த விதமான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக கர்நாடக மாவட்டத்திலும், மராட்டிய எல்லையிலும் கர்நாடக போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் இருமாநிலங்களுக்கிடையே எல்லை பிரச்சினை தொடர்பான மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறாது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி வேறு ஒரு வழக்கை விசாரணை செய்ய இருப்பதால், இந்த எல்லை பிரச்சினை மனு மீதான விசாரணை தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கர்நாடகம்-மகாராஷ்டிராவிற்கு இடையேயான எல்லை பிரச்சினை குறித்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுமா? என்று சூழல் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka and maharastra border case postpond in supreme court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->