கடையை திறப்பதற்கு முன்னதாகவே பந்தியில் உக்காந்த குடிமகன்கள்... வைரலாகும் காணொளிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இந்தியாவில் நாடுதழுவிய ஊரடங்கானது மூன்றாவது முறையாக மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு 32,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12,727 பேர் பூரண நலன்பெற்று இல்லங்களுக்கு திரும்பிஉளளனர். மேலும், 1,568 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மூன்றாவதாக அமலாகியுள்ள ஊரடங்கில் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்தியாவின் ஆந்திர பிரதேசம், கர்நாடக மற்றும் டெல்லி போன்ற சில மாநிலங்களில் மதுபான கடைகள் திறந்து, மது விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மதுபானக்கடைகள் துவங்கவுள்ள நிலையில், நேற்று திறக்கப்பட்ட மதுபான கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது. மதுபான கடைகள் திறக்கும் இரண்டாவது நாளான இன்று, மதுபான கடைகள் திறப்பதற்கு முன்னதாகவே குடிமகன்கள் வருகை தந்து இருந்தது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் டெல்லி மற்றும் கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka and delhi peoples wait wine shop


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->