காங்கிரஸ் எம்.பி. திடீர் இராஜினாமா..! அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் கடந்த 2016 ஆம் வருடத்தில் மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.சி.இராமமூர்த்தி போயிட்டு., வெற்றியும் அடைந்தார். தற்போது இவரின் பதவிக்காலமானது வரும் 2022 ஆம் வருடம் வரை இருக்கிறது. 

இந்த தருணத்தில்., நேற்று யாரும் எதிர்பாராத நிலையில் கே.சி.இராமமூர்த்தி தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும்., தன்னுடைய இராஜினாமா கடிதத்தினை துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவிடம் வழங்கியதை அடுத்து., செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். 

இந்த பேட்டியில் அவர் கூறியதாவது., இந்தியாவுடைய வளர்ச்சியில் நானும் பங்கேற்பதற்கு விரும்புகிறேன். இதனால் எனது பதவியை நானே முன்வந்து இராஜினாமா செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அனைவரும்., எனக்கு அளப்பரிய மரியாதையை தந்தனர். 

கட்சியில் இருக்கும் அனைத்து தலைவர்களின் மீதும் எனக்கு அளவுகடந்த மரியாதை உள்ளது. எனக்கு சிந்தித்து செயல்படுவதற்கு சுதந்திரம் உள்ளது. இராஜினாமா குறித்து யாருக்கும் தெரிவிக்காமல்., தற்போது ராஜினாமா செய்துள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnadaga congress MP resign post and join BJP party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->