காதல் தோல்வி.. காதலியின் புகைப்படம் முகநூலில்.. வீட்டிற்கு வந்த வில்லங்கத்தால், அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பூச்சிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சோபின் என்ற 19 வயது மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். சோபின் பத்தாம் வகுப்பு பயின்று விட்டு, திருமண பந்தல் அமைப்பாளராக பணிக்கு சென்று வந்துள்ளார். 

இவர் இரவு நேரங்களில் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்குவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வழக்கம்போல் மொட்டை மாடிக்கு தூங்கச் சென்ற நபர், காலை வெகுநேரமாகியும் கீழே இறங்கி வரவில்லை. 

மொட்டை மாடிக்கு சென்ற பெற்றோர் அவர் படுத்திருந்த கட்டிலில் மது பாட்டிலும், அதனருகே அரளி விதைகள் இருப்பதையும் கண்டுள்ளனர். இவரை வீட்டிற்குள் தேடியதில் சோபின் கோழிகளை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் பிணமாக தொங்கியுள்ளார். மேலும், அவரது இரண்டு கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்துள்ளது. 

இதனை கண்ட பெற்றோர்கள் உடலை கட்டியணைத்து கதறி அழுத நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், சோபின் வெளியூரை சார்ந்த மாணவியை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. 

மேலும், அந்த மாணவி கடந்த சில நாட்களாக சோபினுடன் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில், மன வேதனை அடைந்த சோபின், காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முகநூலில் பரப்பியுள்ளார். இதனால் காதலியின் உறவினர்களின் சோபினின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளனர். 

இதில் மனம் உடைந்த சோபின், அரளி விதையை அரைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Youngster suicide due to Love Failure


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->