கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் இருந்து பெங்களூர், மைசூர் சிறப்பு இரயில்கள் தேதி நீட்டிப்பு - தென்மேற்கு இரயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை தலைமையகமாக வைத்து இயங்கி வரும் தென்மேற்கு இரயில்வே சார்பாக சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

தற்போது சிறப்பு இரயில்கள் சேவைகளை நீட்டித்து தென்மேற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், " கே.எஸ்.ஆர் பெங்களூர் - சென்னை இடையேயான (02608 / 02607) வண்டி எண் கொண்ட இரயில்களின் சேவை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இதனைப்போன்று மைசூர் - மயிலாடுதுறை இடையேயான சிறப்பு இரயில் (06235 / 06236) வண்டி எண் கொண்ட இரயில்கள் சேவை ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. மைசூர் - தூத்துக்குடி இடையேயான சிறப்பு இரயில் (06236 / 06235) வண்டி எண் கொண்ட சிறப்பு இரயில்கள் சேவை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

கே.எஸ்.ஆர் பெங்களூர் - கன்னியாகுமரி இடையேயான சிறப்பு இரயில் (06526 / 06525) வண்டி எண் கொண்ட இரயில்கள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari to Bangalore Mysore Special Trains Extended till March 31


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->