தமிழ் இனத்திற்கே பெருத்த அவமானம்.! வேதனையோடு கண்டனம் தெரிவித்த கமல்!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில்   திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். 

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்குப்பதிவு மையத்தின் அருகே, திருமாவளவனின் சின்னமான பானையை, ஒருசமூகத்தினர் தூக்கிவந்து சாலையில் போட்டு உடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு சமூகத்தினர் தகராறு செய்தனர்.

இது தொடரவே பெரும் கலவரம் உருவானது. இதனையடுத்து ஆத்திரமடைந்த ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் வசித்துவந்த தெருவில் புகுந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் வசித்து வந்தவர்களையும்  அடித்து  காயப்படுத்தியுள்ளனர்.  

இதைத்தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான  கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி - இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி என்ற பாடல் வரிகளை குறித்து காட்டிய அவர், மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல்.இன்று மனம் பதைக்கும் பொன்பரப்பி சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்று தெரிவித்துள்ளார்.

English Summary

kamal condemned for ponparappi caste issue


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal