இந்தியாவில் 17 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி எண்ணிக்கை.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 10,412,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 508,228 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 5,667,665 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 24 மணி நேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,48,318லிருந்து  5,66,840ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723லிருந்து  3,34,822 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475லிருந்து  16,893 ஆக  உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 1,69,883  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,610ஆக அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jun 30 corona update in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->