ஒரு நீதிபதி செய்யும் வேலையா இது? ஆபாசம், அசிங்கம்!! - Seithipunal
Seithipunal


ஜார்கண்டில் அமைத்துள்ள கோட்டாவில் முதன்மை நீதிபதியாக அருண்குமார் குப்தா பதவி வகித்தார். இவர் இதற்கு முன்னதாக ராஞ்சியில் உள்ள நிர்வாக அதிகாரி பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டுவந்துள்ளார். 

அப்போது அவர், பெண் பயிற்சியாளர்களை கடுமையாக திட்டியுள்ளார். சொல்வதற்கே வாய்க்கூசும் அளவிலான மிகவும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியும், டபுள் மீனிங் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் திட்டி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை பயிற்சி மாணவிகள் வேறு வழியின்றி பொறுத்துக் கொண்டுள்ளனர். 

மேலும் இது போல், இஸ்திரி போடுபவர் சரியாக துணியை அயர்ன் செய்யாத காரணத்திற்காக, அவரது தலையில் சூடான இஸ்திரி பெட்டியை வைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. 

இந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நீதிபதி ஆன பின், ஆபாசமாக திட்டியது குறித்து பெண்கள் 10 பேர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அருண்குமார் குப்தா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக்குப்தா ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்து நீதிபதியை கட்டாய ஓய்வில் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

judicial officer talk double meaning to training officer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->