ஜியோவின் அடுத்த அதிரடி டார்கெட்.. இனி பிளிப்கார்ட், அமோசான் நிறுவனம் அவ்வளவு தான்..!  - Seithipunal
Seithipunal


ம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் குழுமம் அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு போட்டியாக புதிய ஷாப்பிங் தளத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் சில்லறை விற்பனையில் கால் பதித்து ஆரம்பம் செய்தது. அன்றிலிருந்து ரிலையன்ஸ் பிரஷ், ரிலையன்ஸ் ரீட்டெய்ல் என்று வெற்றிகரமாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னிலையில் இருக்கும் ஃபிளிப்கார்ட், அமேசானுக்குக்குப் போட்டியாக ஜியோ மார்ட் என்ற தளத்தை தொடங்க இருப்பதாக ரிலையன்ஸ் ரீட்டெய்ல் அறிவித்திருக்கிறது. இதன், முதல் கட்டமாக மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை, தானே, கல்யாண் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலம் சேவை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 

அதன் பின்னர், படி படியாக நாடு முழுவதும் இத்திட்டதை அமல்படுத்தப்படும் என ரிலையன்ஸ் ரீட்டெய்ல்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த ஜியோ மார்ட் மூலம் பல கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள். ரிலையன்ஸ் ஜியோ வருகையால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டது. தற்போது, ரிலையன்ஸ் ஜியோ மார்ட் மூலம் என்ன நடக்கப்போகிறதோ, என்ன என்ன சலுகைகள் கிடைக்கப்போகிறதோ என்று இப்போதே பலரும் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கி விட்டார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jio introduce new online shopping jiomart


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->