வெட்டி சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில், வித்தியாசமான முறையில் மாஸ் காண்பிக்கும் ஆசிரியர்.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்த அறிவிப்பில், அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிகள் பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்பட துவங்கிய நிலையில், மாணவர்கள் வீட்டில் இருந்தே பயிலும் வகையில் இணையதள வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் பள்ளி மற்றும் ஆசிரியர்களின் நெகிழ்ச்சி செயல் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி தும்கா கிராமத்தில் ஆசியர்கள் மற்றும் மாணவர்களின் நெகிழ்ச்சி செயல் தெரியவந்துள்ளது. 

ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ - மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று ஊர்கூட்டம் ஏற்படுத்தி பேசியுள்ளார். 

இதனையடுத்து பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் மாணவிகள் அமர வீட்டின் பின்புறத்தில் முற்றம் போல ஏற்படுத்தப்பட்டு, அங்கயே கருப்பு நிற கரும்பலையை போல அவரவர் இருக்கைகள் மற்றும் அதற்கான அடையாளமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து அனைவரும் அமர்ந்துள்ள நிலையில், அனைவருக்கும் ஒரே நேரத்தில் பாடம் கற்பிக்கும் பொருட்டு கையிலேயே ஒலிபெருக்கியையும் வைத்துக்கொண்டு பாடத்தினை பயிற்றுவித்து வருகின்றனர்.

இதன்மூலமாக மாணவ - மாணவிகள் பயில துவங்கிய நிலையில், இந்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 இலட்சம் வரை என வகைவகையாக சம்பாத்தியம் செய்து, பள்ளி வேளைகளில் ஒபி அடித்துக்கொண்டு இருக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில், இந்த ஆசிரியர்களின் நடவடிக்கை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jharkhand Teacher School Students


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->