இல்லீகளாக எல்லைதாண்டி சென்ற பணம்.. அதிரடி காட்டிய ஜம்மு காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி கொடுத்து உதவி செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைவர் முகேஷ் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், காவல் அதிகாரி முகேஷ் சிங் கூறுகையில், " ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் முடஸ்டர் பரூக் பத் ஈடுபட்டதாகவும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் சேர்ந்த கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், கடந்த இரண்டு முதல் மூன்று வருடங்களாக, இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதும், அவற்றில் சில மும்பையில் இருந்து மின்னணு முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் " தெரிவித்துள்ளார். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir Police hold culprits illegal money transaction for terrorist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->