ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்.. தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நிலநடுக்கம் என்பது தற்போது தொடர்கதையாகியுள்ளது. ஏனெனில், பல வருடங்களுக்கு முன்னர் நிலநடுக்கம் என்பதை அறியாத மக்களுக்கு இன்று நிலநடுக்கம் எளிதாக துவங்கியுள்ளது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் நிலநடுக்கம் என்பது இயல்பானது. 

தற்போது இந்த சூழ்நிலை இந்தியாவிலும் ஏற்பட துவங்கியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, நேபாள பகுதிகள், ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களில் கடந்த சில வருடமாக நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. மஹாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒரேநாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்று தேய்ச்ய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 12.45 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir Earthquake 26 September 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->