ஜம்மு காஷ்மீரில் 39 நாட்களுக்குப் பின் தற்போதைய நிலை.! - Seithipunal
Seithipunal


 கட்டுப்பாடுகள் நீங்கி 39 நாட்களுக்குப் பின்னர், ஜம்மு காஷ்மீரில் முழுவதுமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம், தீவிரவாத ஊடுருவல் முயற்சி போன்ற காரணங்களால் அம்மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கூடுதலாக துணை ராணுவப் படை குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் வீதிகளில் நடமாடவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரிவினைவாத தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்கள்.

144 தடை, ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முடங்கியது. ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல், அமலில் இருந்த கட்டுப்பாடுகள் அச்சுறுத்தல் குறைந்த பகுதிகளில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த குப்வாரா, ஹந்வாரா (Kupwara and Handwara) நகரங்களில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டன. தகவல் தொடர்பு சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி சேவை வசதியும் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் அருகே உள்ள ஹஸ்ரத்பல் என்ற பகுதியில் மட்டும் புதிதாக கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jammu kashmir current sutituion


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->