சந்திராயன் 3, ஆதித்யா, சுகன்யான்... சாதனை படைக்கபோகும் இந்தியா.. இஸ்ரோ சிவன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதன்பின்னர், இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார். 

இந்த உரையில், " ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ஜி-சாட் 12 செயற்கைகோளின் ஆயுட்காலம் முடிவடைந்தது. தற்போது ஏவப்பட்டுள்ள ஜி-சாட் பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 செயற்கைகோள் மூலமாக இந்தியா, அந்தமான், லட்சத்தீவுகளில் தகவல் தொழில்நுட்பம் மேம்படும். 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 77 ஆவது செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 ஆகும். பி.எஸ்.எல்.வி 51 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும். பி.எஸ்.எல்.வி 50 சி.எம்.ஸ் 1 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சந்திராயன் 3, ஆதித்யா, சுகன்யான் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும். 

விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் அனைத்தும் சாத்தியமாகியுள்ளது. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களின் குடும்பத்தாருடன், கொரோனா பாதுகாப்பு வழிமுறையுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்.. ஜெய்ஹிந்த் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO Sivan Speech after Successfully Launch PSLV 50 CMS 01 17 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->