நீங்கள் தமிழரா? இந்தியரா? செய்தியாளரின் கேள்விக்கு, இஸ்ரோ சிவம் அசத்தல் பதில்!! - Seithipunal
Seithipunal


சந்திரயான் 2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை 22ல் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் செலுத்தியது. முதலில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நிலவை நோக்கி விண்கலம் இயக்கப்பட்டது.  பிறகு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றது. இந்நிலையில் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரித்து, அதனை நிலவின் தரையில் பத்திரமாக இறக்கும் முயற்சியில் இஸ்ரோ செய்துகொண்டு இருந்தது. திடீரென லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

திடீரென்று ஏற்பட்ட கோளாறால் விக்ரம் லேண்டர்  இலக்கிலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்தது. சந்திராயன்-2 விண்கலம்‌ பழுதானவுடன் இஸ்ரோ தலைவர்‌ சிவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். இரு நாட்கள் முன்பு விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை ஆர்பிட்டர் வெளியிட்டது. ஆனால் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை. 

இந்நிலையில் இஸ்ரோ தலைவர்‌ சிவனை, பிரபல ஆங்கில தொலைக்காட்சி பேட்டி எடுத்தது. அப்போது தமிழராய் இருந்து நீங்கள் இவ்வளவு பெரிய பதவிக்கு உயர்ந்துள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு கூற விரும்புவது என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சிவன், முதலில் நான் ஒரு இந்தியன். இஸ்ரோவின் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு நாட்டின் அனைத்து பகுதி மக்களுக்கும் நான் சொந்தமானவன். பல மொழி பேசும் மக்கள் உழைத்தே இந்த நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro sivam press meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->