இஸ்ரோ விஞ்ஞானி அடித்துக் கொலை! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையம் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. அதில் கேரளாவைச் சேர்ந்த சுரேஷ்(56 வயது) மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். இவர் அங்குள்ள அமீர்பேட்டில் உள்ள அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

விஞ்ஞானி சுரேஷ் அவர்களின் மனைவி இந்திரா, சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் வெளிநாட்டிலும், மகள் டெல்லியிலும் உள்ளனர். 

இந்த நிலையில், வழக்கம்போல் சுரேஷ் நேற்று பணிக்குச் வரவில்லை இதையடுத்து அவருடன் பணிபுரியும் விஞ்ஞானிகள், சுரேஷூக்கு செல்போனில் அழைப்பு விடுத்த போதும் அவர் எந்தவித பதில் அளிக்காததால், அவரது மனைவி இந்திராவிடம் தகவலைக் கூறினர்.

இதனைத்தொடர்ந்து, உறவினர்களுடன் ஐதராபாத் விரைந்த இந்திரா, வீட்டை திறக்க முயற்சித்தார் ஆனால் வீட்டை திறக்க முடியாததால், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, விஞ்ஞானி சுரேஷ் சடலமாகக் கிடந்தார். 

இதைக் பார்த்த சுரேஷின் மனைவியும், உறவினர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். தலையில் கனமான பொருளால் சுரேஷ் தாக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro scientist murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->