ஜிசாட் ஜிஎஸ்எல்வி எப் 10 செயற்கைகோள் விண்ணில் செலுத்தும் தேதி மாற்றம்.. இஸ்ரோ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு என்று அழைக்கப்படும் இஸ்ரோ இந்தியாவிற்கு தேவையான பல்வேறு செயற்கைகோள்களை தொடர்ந்து விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. 

இந்தியாவின் வளர்ச்சி, அறிவியல், பாதுகாப்பு, நில அமைவிடங்களுக்கான அம்சங்கள், வானிலை பதிவுகள், இராணுவத்திற்கு தேவையான பதிவுகள் போன்று பல்வேறு வகையான செயற்கை கோள்களை அடுத்தடுத்து விண்ணில் செலுத்தி வருகிறது. 

மேலும், விண்வெளியில் உள்ள பல்வேறு கிரகங்களை ஆராய்ச்சி செய்யவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லவும் இஸ்ரோ பெரும் உதவியை செய்து வருகிறது. 

இந்த நிலையில், இஸ்ரோ ஜியோ இமேஜிங் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த செயற்கை கோள் ஜிசாட் 10 ஜியோ இமேஜிங் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும், இது பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து 36 ஆயிரம் கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. 

இந்த செயற்கைகோள் இந்தியாவின் விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரழிவு எச்சரிக்கை போன்று பல பயன்பாடுகளில் உதவி செய்யும் என்றும், இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மார்ச் மாதம் 5 ஆம் தேதியன்று மாலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில், நாளை (05/03/2020) மாலை விண்ணில் செலுத்தப்படவிருந்த செயற்கைக்கோளானது, தொழிற்நுட்ப காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro postpended GSLV F10 launch date


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->