அடுத்தகட்ட முயற்சியில் அதிரடியாக களமிறங்கும் இஸ்ரோ..! கொண்டாட்டத்தில் விஞ்ஞானிகள் மற்றும் இந்தியர்கள்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவுடைய 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்குள்., விண்வெளிக்கு மனிதனை அனுப்பி வைக்கும் முயற்சியில் வெற்றியடைவோம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் இந்த அறிவிப்பின் படி., யாரும் 2022 ஆம் வருடத்திற்குள் இந்த சாதனை நிகழ்த்தப்படும் என்பது தெரியவந்துள்ளது. 

இந்த திட்டத்திற்கு "சுகன்யான்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலயில்., இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லவிருக்கும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை., பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ (TRTO) வழங்கவுள்ளது. 

space, space man, galaxy,

இதுமட்டுமல்லாது., தொழில்நுட்பம் குறித்த முக்கிய தகவல்களையும்., உதவிகளையும் டி.ஆர்.டி.ஓ வழங்கவுள்ளது. விண்ணிற்கு சென்ற பின்னர் மனிதருக்கு தேவையான உணவு மற்றும் மனிதனின் உடல் நிலை குறித்த தகவலை தரும் தொழில்நுட்பம்., அவசர காலத்திற்கான தப்பிக்கும் உபகரணம்., கதிர்வீச்சை கணக்கிடும் கருவி மற்றும் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் கூண்டு., வீரர்களை மீட்க பாராசூட் போன்றவற்றை TRTO வழங்குகிறது. 

இந்த திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு நேற்று இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில்., மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் விண்கல மைய இயக்குனர் உன்னிகிருஷ்ணன் நாயர் மற்றும் அவரின் தலைமையிலான விஞ்ஞானிகளும் இருந்தனர். மேலும்., TRTO - நிறுவனத்தின் தலைவர் ஜி.சதீஷ் ரெட்டியின் தலைமையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த திட்டத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று TRTO தலைவர் தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

isro plan to send human in space


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->