விண்ணிலும் பல சாதனைகளை நிகழ்த்தவிருக்கும் இந்தியா.. இஸ்ரோ சிவன் நம்பிக்கை தகவல்.! - Seithipunal
Seithipunal


இஸ்ரோ மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் சுகன்யான் என்ற விண்வெளி திட்டத்தினை செயல்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும் 2022 ஆம் வருடத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்த நிலையில், இதற்காக விமானப்படையில் பணியாற்றி வரும் 3 வீரர்களை தேர்வு செய்து பயிற்சிக்காக ரஷிய விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவல் காரணமாக, சுகன்யான் திட்டம் அமலாக ஒரு வருடம் தள்ளிப்போகலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூரில் செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இதனை வரும் 2022 வருடம் அமல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், டிசம்பர் மற்றும் வரும் புதிய வருடமாக ஜனவரி துவக்கத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இது தாமதமாகலாம். 

இதனை அடுத்த வருடத்தில் நாம் செய்லபடுத்துவோம். இதனால் மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் சுகன்யான் திட்டம் ஒரு வருடத்திற்கு தள்ளி போகலாம். லேண்டர் மற்றும் ரோவர் தயாரித்து, சந்திராயன் 3 விண்ணிற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ரயான் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO Head Shivan Pressmeet 8 December 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->