ஈரானில் தவித்த இந்தியர்கள் மீட்பு.. இராஜஸ்தான் முகாமில் சோதனை.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனால் பல உலக நாடுகளில் தவித்த இந்தியர்களை அரசு மீட்டு கொண்டு வந்தது. ஈரான் நாட்டிலும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து இருந்தது. 

இதனால் உலகளவில் விமான போக்குவரத்துகளும் முடங்கிய நிலையில், அரசின் உதவியுடன் மக்களை சொந்த நாட்களுக்கு மீட்க மட்டும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஈரான் நாட்டில் 600 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக செய்தி வெளியானது.

இவர்கள் தங்களை மத்திய அரசு மீட்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த சில தினத்திற்கு முன்னதாக 277 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் இராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதன் இரண்டாம் கட்டமாக சுமார் 275 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்புர் நகருக்கு அழைத்து வரப்பட்டு இராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran Indians rescued


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->