இந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் அணிக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ.! வெளியான அதிர்ச்சி செய்தி.! தலையில் துண்டை போட்ட பரிதாபம்.!  - Seithipunal
Seithipunal


13வது ஐபிஎல் சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. ஐபிஎல் குவாலிபையர்-2 அபு தாபியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெரும் அணி, இறுதி போட்டியில் மும்பை அணியுடன் மோத உள்ளது. 

இந்த ஐபிஎல் போட்டியின் பங்கேற்கும் வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலம் எடுத்து ஒவ்வொரு அணிகளும் விளையாடுகிறது. ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாவது அணிக்கும், சிறந்த தொடர் நாயகன் உள்ளிட்டவைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

கடந்த சீசனில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 2-வது இடம் பெறும் அணிக்கு 12.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆரஞ்ச் கோப், பர்பிள் கேப் வெல்லும் வீரர்களுக்கு, எமர்ஜிங் வீரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 10 கோடி ரூபாய்தான் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக வருமானம் இல்லாததால், செலவுகளை குறைத்து, பரிசுத் தொகை பாதியாக குறைக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

2-வது இடம் பெறும் அணிக்கு  6 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஆரஞ்ச் கோப், பர்பிள் கேப் வெல்லும் வீரர்களுக்கு, எமர்ஜிங் வீரர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படுவது குறித்து தெரிவிக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 champion gift amount reduce


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->