வாட்சப்பில் பிழை கண்டுபிடித்த இந்திய இளைஞன்!! பரிசு தொகையை அள்ளிக்கொடுத்த பேஸ்புக் நிறுவனம்!! - Seithipunal
Seithipunal



சமூக வலைதளத்தில், வாட்ஸ் ஆப் பலருக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக  உள்ளது. தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. நாளுக்கு நாள் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் செய்து வருகிறது. 

கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்த இளைஞர் ஆனந்த கிருஷ்ணா. 19 வயது நிரம்பிய இவர்  பொறியியல் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த கூடியவர். இந்தநிலையில் வாட்சப் பயனாளருக்கு தெரியாமலே அவருடைய கோப்புகள் அனைத்தையும் நீக்க முடியும் என்கிற பிழையை இரண்டு மாதத்திற்கு முன்பாகவே ஆனந்த கிருஷ்ணா கண்டறிந்துள்ளார்.

ஆனந்த கிருஷ்ணன் இதனை புகாராக பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பி, அதனை திருத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து பேஸ்புக் நிறுவனம் அவரது புகாரினை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், அவருடைய கோரிக்கைகளை உறுதி செய்தது.

இந்தநிலையில் பேஸ்புக் நிறுவனம், ஆனந்த கிருஷ்ணனுக்கு 500 டாலர் (ரூ.34,600) ரொக்க பரிசினை வழங்கியுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டிற்கான பேஸ்புக் நன்றி பட்டியலில் 80 வது இடத்தில் அனந்தகிருஷ்ணா பெயரையும் சேர்த்து பேஸ்புக் நிறுவனம் கௌரவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian youngster got price from facebook


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->