இது தான் சரியான நேரம்! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மிக பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய தொடர்வண்டி துறையில் பணிபுரிய இளைஞர்கள் தவமாய் தவமிருந்து காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் 14,033 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆர்.ஆர்.பி. என்னும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  
 
மொத்த காலி பணியிடங்கள்: 14,033
பதவியின் பெயர் : இளநிலை பொறியாளர்(JE) - 13,034, 
பதவியின் பெயர் : இளநிலை பொறியாளர் (JE-IT) - 49
பதவியின் பெயர் : இளநிலை பொறியாளர் (DMS) - 456
பதவியின் பெயர் : கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் (CMA) - 494

வயது வரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

கல்வி தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல்,பிரிண்டிங் டெக்னாலஜி மற்றும் அதன் துறை சார்ந்த துறைகளில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் முடித்து இருப்பவர்கள் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கும், இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
மாதசம்பளம்: அடிப்படை சம்பளம் ரூ.35,400 + இதர ஊதியம்.

தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.500 . மற்றவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வு எழுதிய பின்பு பொதுப்பிரிவினர் ரூ.400 திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் ரூ.250 திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.  

தேர்வு செய்யப்படும் முறை:  கணினி வழி எழுத்துத் தேர்வு + சான்றிதழ் சரிபார்ப்பு + மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  ரயில்வே பணியாளர் தேர்வாணைத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமான www.rrbchennai.gov.in என்ற பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கணினி தேர்வு நடைபெறும் நாள் : முதற்கட்ட கணினி வழித் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு : http://www.rrcb.gov.inஅல்லது http://www.rrbchennai.gov.in/downloads/cen03-2018-notice-30-12-2018.pdf  

கடைசி தேதி: 31.01.2019 இரவு 11.59 மணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Railway Jobs Notification


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->