கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களுக்கு கரம் கொடுத்த ஐ.என்.எஸ்.! கவலையில் இருந்து மீண்ட உறவினர்கள்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் நடுக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அரபிக்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள கியார் புயலின் காரணமாக., கடலானது கடுமையான கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. 

இந்த தருணத்தில்., மும்பையின் மேற்கு பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த சமயத்தில்., படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடல் கொந்தளிப்பால் நீரில் தத்தளித்தனர். மேலும்., படகும் கவிழ்ந்தது. 

இதனையடுத்து இதுகுறித்த தகவல் கடற்படை அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு அருகிலேயே ஐ.என்.எஸ். போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டு இருந்துள்ளது. 

இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீனவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விஷயம் குறித்து கடற்படையின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீனவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும்., யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian navy force rescued fishermen


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->