எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. அடங்காத சீனாவை அடக்க இந்திய ராணுவத்தின் அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


சீன ராணுவம் கடந்த சில மாதங்களாக இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சித்து வருகின்றது. கடந்த 15ஆம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கால்வாய் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை மீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன இராணுவ வீரர்கள் முயற்சித்தனர்.

இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து மோதலில் ஈடுபட்டதால் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்தது. சீனா ராணுவத் துருப்புகளை எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் குவித்தது. 

பதிலுக்கு இந்திய ராணுவமும் தனது படைகளைக் குவித்தது. இந்த பதற்றத்தை தணிக்க இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் பின்வாங்க ஒப்புக்கொண்டன. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முரண்பாடாக சீனா எல்லைக்குள் படைபலத்தை குவித்தது. 

போர்  விமானங்களை அதிக அளவில் அந்த பகுதியில் நிறுத்தியது. மேலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன போர் விமானங்கள் அதிக அளவில் பறக்கின்றன.  இந்நிலையில், லடாக் செக்டாரின் நிலத்தில் இருந்து விண்ணில் தாக்கும் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் எல்லைப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள், " கிழக்கு லடாக் பகுதிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தான் இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Missile ready to emergency situation in India china border


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->